Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

பைல்ஸ் பிரச்சனையால ரொம்ப அவதிப்படுறீர்களா? இந்த டயட் ஃபாலோ பண்ணுங்க…

பைல்ஸ் பிரச்சனையால ரொம்ப அவதிப்படுறீர்களா? இந்த டயட் ஃபாலோ பண்ணுங்க…

பைல்ஸ் என்பது ஆசனவாயின் வெளிப்புறம் அல்லது கீழ்ப்பகுதியில் மலக்குடலை சுற்றியுள்ள நரம்புகள் வீக்கமடைவதே ஆகும். பைல்ஸ் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுக் போக்கு ஆகியவை. குடலியக்கத்தின் போது, பாதிக்கப்பட்ட நபருக்கு கடுமையான வலி, எரிச்சல் மற்றும் இரத்த போக்கு ஆகியவை ஏற்படக்கூடும். இந்த அறிகுறிகள் பைல்ஸ் இருப்பதை குறிப்பதாகும்.

உண்ணும் உணவில் போதுமான நார்ச்சத்து இல்லாதது, அதிகப்படியான உடல் பருமன், மலம் கழிக்கும் போது மலக்குடலில் அதிகப்படியான அழுத்தத்தை கொடுப்பது போன்றவை ஏற்படக்கூடும். அதுமட்டுமில்லாமல், வயதாவதால் இணைப்புத் திசுக்கள் முதுமையாவதாலோ, மடக்குடல் மற்றும ஆசுன வாய் பலவீனமாவதாலோ பைல்ஸ் ஏற்படக்கூடும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம்.

பைல்ஸ் அறிகுறிகள்:

*இரத்தம் கலந்த மலம் வெளியேறுதல்

*ஆசன வாயில் வலி

*கடுமையான அரிப்பு

*மலம் கழிக்கும் போது கடுமையான வலி

பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய டயட்

காலை எழுந்தவுடன் - வெதுவெதுப்பான நீர், ஒரு டீஸ்பூன் ஆளி விதை, கற்றாழை ஜுஸ் அல்லது அருகம்புல் ஜூஸ்.

காலை உணவு – கோதுமை கஞ்சி/ வெஜிடபிள் உப்புமா, சேமியா, இட்லி, ரொட்டி, ஓட்ஸ், ஸ்டப்டு சப்பாத்தி இவற்றில் ஏதாவது ஒன்று காய்கறிகள் அல்லது தால் உடன் சாப்பிடவும்.

காலை உணவிற்கு பிறகு - பழங்கள், பழச்சாறு, ஹெர்பல் டீ, இளநீர், தேங்காய் பால், எலுமிச்சை ஜூஸ் ஏதாவது ஒன்று.

மதிய உணவு – சப்பாத்தி, கைக்குத்தல் அரிசி சாதம், சாலட், காய்கறி பொரியல், பருப்பு, சிக்கன் (வாரத்திற்கு ஒரு முறை தான்)

சாயங்காலம் – வறுத்த கடலைப்பருப்பு, சூப், சேமியா பாயாசம், மூலிகை டீ, க்ரீன் டீ, முளைக்கட்டிய பயிர்கள்.

இரவு உணவு – சப்பாத்தி, காய்கறிகள், தால்.

பைஸ்ல் பிரச்சனை உள்ள ஒவ்வொருவரும் தங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியவை, சேர்த்துக் கொள்ள கூடாதவை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்…

சாப்பிட வேண்டியவை

பழங்கள் – ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, முலாம்பழம், அவகேடோ, பீச், பேரிக்காய், மாதுளை, பெர்ரி வகைகள் அனைத்தும், மாம்பழம், லிச்சி, சீத்தாப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, சப்போட்டா, அன்னாச்சி, திராட்சை.

காய்கறிகள் – சர்க்கரைவள்ளி கிழங்கு, கத்திரிக்காய், தக்காளி, இஞ்சி, வெங்காயம், முள்ளங்கி, காலிஃப்ளவர், ப்ராக்கோலி, செலரி, கேரட், பசலைக்கீரை, பட்டாணி, வெந்தயக்கீரை, உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வெண்டைக்காய், புடலங்காய், பாகற்காய்.

பருப்பு வகைகள் – அனைத்து வகை பருப்புகளையும் பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் சேர்த்துக் கொள்ளலாம். அதை சாப்பிட்டாலும் அளவாக சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

பால் பொருட்கள் – குறைந்த அளவில் கொழுப்பை கொண்ட பால், தயிர், டோஃபு, மோர், யோகர்ட், காட்டேஜ் சீஸ்.

மசாலா பொருட்கள் – சீரகம், மல்லி, சோம்பு, பட்டை, ஓமம்.

இறைச்சி உணவுகள் – முட்டையின் வெள்ளைக்கரு, வறுத்த கோழி, மட்டன், க்ரில் மீன்

எண்ணெய் – பசு நெய், கனோலோ எண்ணெய், ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் ப்ரன் ஆயில்.

சாப்பிட கூடாதவை

பழங்கள் – அளவிற்கு அதிகமான வாழைப்பழம், கேனில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகள்.

காய்கறிகள் – கேனில் அடைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் உறைய வைக்கப்பட்ட காய்கறிகள்.

பால் பொருட்கள் – கொழுப்பு நிறைந்த பால், க்ரீம், கொழுப்பு அதிகமான யோகர்ட், க்ரீம் சீஸ், கண்டன்ஸ்டு மில்க்.

மசாலா பொருட்கள் – பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், மிளகு.

இறைச்சி உணவுகள் – பதப்படுத்தப்பட்ட இறைச்சி, வறுத்த இறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கானாங்கெளுத்தி மீன், சுறா.

எண்ணெய் – க்ரீம், பாமாயில், தேங்காய் எண்ணெய், வெண்ணெய்.

தவிர்க்கப்பட வேண்டிய பிற உணவுகள் – பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்ட உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ், ஊறுகாய், செயற்கையாக சுவையூட்டப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →