Monday, October 12, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் தொழில்நுட்பம் வணிகம் கல்வி & வேலை விளையாட்டு வாகனம் உலகம் குழந்தை வளர்ப்பு உடற்பயிற்சி BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
சமையல்

பலாப்பழ ஊறுகாய்!!!

பலாப்பழ ஊறுகாய்!!!

உங்களுக்கு ஊறுகாய் என்றால் மிகவும் பிடிக்குமா? சிலர் அதை சாப்பிட்டாலும் அதனுடன் ஊறுகாய் தொட்டு தான் சாப்பிடுவார்கள். நீங்களும் அப்படிப்பட்டவர் என்றால் சற்று வித்தியாசமாக பலாப்பழத்தை வைத்து ஊறுகாய் செய்து பாருங்கள். இந்த கோடைக்காலத்தில் சாப்பிட மிகவும் ஏற்ற ஊறுகாய் இது. ஊறுகாய் சாப்பிட்ட மாதிரியும் இருக்கும், சத்தான பழத்தை சாப்பிட்ட மாதிரியும் இருக்கும் அல்லவா. ஒரு முறை இதை செய்து பாருங்கள், வீட்டில் உள்ள அனைவரும் இதை விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். குழந்தைகளும் வேண்டாம் என்று கூறாமல் சாப்பிடுவார்கள். இதை ஒரு முறை செய்து வைத்தால் நீண்ட நாட்களுக்கு வைத்து சாப்பிடலாம். சரி வாருங்கள் இப்போது பலாப்பது ஊறுகாய் எப்படி செய்வதென்று பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்

  • பலாப்பழம் - 3 கிலோ (சிறு துண்டுகளாக நறுக்கியது)
  • உப்பு - 1/4 கப்
  • மஞ்சள் - 1 கப்
  • காஷ்மீரி மிளகாய் தூள் - 1 கப்
  • கடுகு - 1/2 கப்
  • கருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் - 2 டீஸ்பூன்
  • கடுகு எண்ணெய் - 2 லிட்டர்

செய்முறை

  • முதலில் பலாப்பழத்தை தண்ணீரில் 1/4 கப் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
  • இப்போது தண்ணீரை வடிகட்டி விட்டு, பலாப்பழத்தை தனியாக எடுத்து நன்கு உலர வைக்கவும்.
  • பலாப்பழம் நன்கு உலர்ந்ததும் அதில் உப்பு, மிளகாய் தூள், கருஞ்சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து பிரட்டி விடவும்.
  • பின்னர், அதை ஒரு ஜாடியில் போட்டு மூடி வைத்து 4 நாட்களுக்கு ஊற விடவும். ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்து நன்கு குலுக்கி வைக்கவும்.
  • அதன் பிறகு, கடுகு எண்ணெயை நன்கு சூடாக்கி கடுகு சேர்த்து தாளித்து இறக்கி நன்கு ஆற வைத்து, பலாப்பழ ஊறுகாய் ஜாடியில் சேர்த்து கிளறி விடவும். இப்போது பலாப்பழ ஊறுகாய் தயார்.

Share this article

R

Rajasekar

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

…

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

…

…

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,840
தங்கம் (24k)
1 கிராம்
₹14,532
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

அடுத்து வாசிக்க

ஐயங்கார் வீட்டு முறைப்படி சத்தான உளுந்து சாதம் செய்வது எப்படி? வாசிக்க →