Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருக்குறங்க இந்த பழங்களை சாப்பிடுறது ரொம்பவே நல்லதாம்...

உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருக்குறங்க இந்த பழங்களை சாப்பிடுறது ரொம்பவே நல்லதாம்...

உயர் இரத்த அழுத்த பிரச்சனை என்பது இன்றைய காலகட்டத்தில் பொதுவானதாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு இரண்டு நபர்களில் ஒருவருக்கு இந்த பிரச்சனை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல காரணங்களால் உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட காரணமாக உள்ளன. உண்மையில், சிலருக்கு அதிக மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாக உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளது. சிலருக்கு, பணி அழுத்தம், காலக்கெடு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவு முறை, குறைவான தூக்கம் போன்ற பழக்கவழக்கங்களால் இரத்த அழுத்தம் அதிகமாகத் தொடங்குகிறது. சரியான நேரத்தில் அதை குறைக்க நீங்கள் உரிய மருத்துவம் மேற்கொள்ளவிட்டால் நீங்கள் பல கடுமையான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இதனுடன் சிலர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் வேறு விதத்திலும் சில முறைகளை மேற்கொள்கின்றனர். உண்மையில், மருந்துகளை காட்டிலும், நீங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்தால், ஆரோக்கியமான உணவு பொருட்களை உட்கொள்தல், சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையை பின்பற்றுதல், உங்கள் இரத்த அழுத்தம் அதிகமாகாமல் தடுக்க முடியும். உயர் இரத்த அழுத்தத்தைப் போக்க உதவக்கூடிய சில பழங்களைப் பற்றி தான் இந்த கட்டுரையில் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் அன்றாட உணவில் இந்த பழங்களை சேர்த்து வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் பழங்கள்

கிவி

கிவி சாப்பிடுவதன் மூலம், உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கட்டுக்குள் வைத்திருக்கலாம். உண்மையில், கிவி மிகவும் ஆரோக்கியமான பழமாகும். இது செரிமானத்திலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை அனைத்திற்கும் உதவக்கூடியது. இது தவிர, கிவி பழத்தை சாப்பிடுவதால், சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உண்மையில், கிவியில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, இது இரத்த அழுத்தத்தைக் குறைத்திட உதவுகிறது. நீங்கள் தினமும் இரண்டு அல்லது மூன்று கிவி பழங்களை உட்கொண்டால், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தர்பூசணி

தர்பூசணி பழமானது உடலை புத்துணர்ச்சியுடனும், குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்திருக்கும். இந்த பழம் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இரத்த அழுத்தத்திற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தாக முடியக்கூடும். இதனால் இதய நோய் அபாயம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். எனவே, நீங்கள் தர்பூசணி பழத்தை உங்களது அன்றாட உணவில் சேர்த்து கொள்ள பழகுங்கள். இதனால், உங்கள் உடல் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, இரத்த அழுத்தமும் கட்டுப்படுத்தப்படும்.

மாம்பழம்

மாம்பழம் கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய பழம். அதிலும், உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் மாம்பழங்களை கட்டாயம் சாப்பிட வேண்டும். உண்மையில், மாம்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது, உயர் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள சிறந்த பழமாகும். நீங்கள் மாம்பழத்தை எப்படி வேண்டுமானாலும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கோடைகாலத்தில் அதிகமாக கிடைக்கும் மாம்பழத்தை தினந்தோறும் சாப்பிடுவதன் மூலம் உங்களது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்து கொள்ள முடியும்.

வாழைப்பழம்

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழத்தைச் சாப்பிடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்திடலாம். இது மிகவும் சாதாரணமாக கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று. ஒவ்வொரு நாளும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்களை சாப்பிடுங்கள். இதன்மூலம், உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருங்கள்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →