Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

உங்கள் பிறந்த தேதியை வைத்து அதிர்ஷ்ட நிறத்தை தெரிந்து கொள்ளலாம்...

உங்கள் பிறந்த தேதியை வைத்து அதிர்ஷ்ட நிறத்தை தெரிந்து கொள்ளலாம்...

அதிர்ஷ்ட எண் மற்றும் அதிர்ஷ்ட நிறம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதிர்ஷ்டத்தை எண்ணிலும், நிறத்திலும் அனைவருமே கொண்டிருப்பது இயல்பு தான். அதிலும், எண் கணிதம் மற்றும் அதிர்ஷ்ட நிறங்கள் ஆகியவை ஒன்றாக இணைந்தால், உண்மையில் சிறந்த பலன்களைப் பெற்றிடலாம். ஜோதிடத்தில் ஒவ்வொரு வண்ணங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. இன்றைய காலக்கட்டத்தில் எண் கணிதத்தின் மீதான நம்பிக்கை அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். அதிலும், அதிர்ஷ்ட எண் மற்றும் அதிர்ஷ்ட நிறம் என அனைத்திலுமே நன்மை நிகழ்வதற்கான வழிகளை தான் அனைவருமே முதலில் பார்ப்போம். எனவே, இந்த கட்டுரையில் உங்கள் பிறந்த தேதிக்கான அதிர்ஷ்ட நிறங்களை உங்களுக்கு சொல்ல போகிறோம்…

எண் 1
நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால் ஜோதிடத்தில் உங்களது எண் 1ஐ குறிக்கிறது. எண் 1 சூரியனால் ஆளப்படுகிறது. இந்த எண்ணைக் கொண்டவர்கள் அதிர்ஷ்டத்தை பெற வேண்டுமெனில் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தைப் பயன்படுத்த வேண்டும்.

எண் 2
நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால் உங்களது எண் 2ஐ குறிக்கிறது. எண் 2 சந்திரனால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த எண்ணிற்கு சொந்தக்காரர்கள் அதிர்ஷ்டத்திற்காக வெள்ளை நிறத்தை பயன்படுத்த வேண்டும்.

எண் 3
நீங்கள் 3, 12, 21, 30 ஆகி தேதிகளில் பிறந்தவர்கள் என்றால் எண் 3 உங்களுக்கானது. எண் 3 குரு பகவானால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த எண்ணைக் கொண்டவர்கள் அதிர்ஷ்டத்திற்காக மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்த வேண்டும்.

எண் 4
நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால் உங்களது எண் 4. எண் 4 ஆனது ராகு பகவானால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் இந்த எண்ணின் சொந்தக்காரர்கள் அதிர்ஷ்டத்திற்காக சாம்பல் அல்லது சாம்பல் நிற கருப்பு நிறத்தைப் பயன்படுத்த வேண்டும்.

எண் 5
நீங்கள் 4, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால் எண் 5 உங்களுக்கானது. எண் 5 புதன் கிரகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும், இந்த எண்ணைக் கொண்டவர்கள் அதிர்ஷ்டத்திற்காக பச்சை நிறத்தைப் பயன்படுத்த வேண்டும்.

எண் 6
நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால் எண் 6ஐ குறிக்கிறது. எண் 6 சுக்கிரனால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் இந்த எண்ணிற்கு சொந்தக்காரர்கள் அதிர்ஷ்டத்திற்காக வெள்ளை அல்லது வெளிர் நீல நிறத்தைப் பயன்படுத்த வேண்டும்.

எண் 7
நீங்கள் 6, 16, 25 ஆகி தேதிகளில் பிறந்தவர்கள் என்றால் உங்களுக்கான எண் 7. 7ஆம் எண் கேதுவால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் இவர்கள் அதிர்ஷ்டத்திற்காக பழுப்பு அல்லது சாம்பல்-பச்சை நிறங்களைப் பயன்படுத்த வேண்டும்.

எண் 8
நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால் 8 என்ற எண்ணால் குறிப்பிடப்படுகிறீர்கள். எண் 8 ஆனது சனி பகவானால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் இந்த எண்ணை உடையவர்கள் அதிர்ஷ்டத்திற்காக அடர் நீலம் அல்லது கருப்பு நிறங்களைப் பயன்படுத்த வேண்டும்.

எண் 9
நீங்கள் 9, 18, 27 ஆகி தேதிகளில் பிறந்தவர்கள் ஆனால் 9 என்ற எண்ணால் குறிப்பிடப்படுகிறீர்கள். எண் 9 செவ்வாய் பகவானால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் இந்த எண்ணிற்கு சொந்தக்காரர்கள் அதிர்ஷ்டத்திற்காக சிவப்பு நிறத்தைப் பயன்படுத்த வேண்டும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →