Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

இனி சோப்பு போட்டு முகத்த கழுவாதீங்க? இத யூஸ் பண்ணுங்க முகம் கண்ணாடி மாதிரி ஜொலிக்கும்...

இனி சோப்பு போட்டு முகத்த கழுவாதீங்க? இத யூஸ் பண்ணுங்க முகம் கண்ணாடி மாதிரி ஜொலிக்கும்...

இப்போதெல்லாம் பெண்கள், ஆண்கள் என அனைவருமே தங்களது முகத்தை சுத்தம் செய்ய சந்தைகளில் விற்கப்படும் சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், இவற்றை வெகு நாட்களுக்கு பயன்படுத்தும் பட்சத்தில் உங்கள் சருமம் சற்று வறண்டதாகவும், உயிரற்றதாகவும் மாறக்கூடும். இன்றைய மாசடைந்த சூழலில் உங்கள் சருமத்தை மாசு மற்றும் வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டியது அவசியம். அப்படி உங்கள் சருமத்தை பாதுகாக்க ரசாயனம் நிறைந்த பொருட்களைப் பயன்படுத்துவதை காட்டிலும், இயற்கையாக பொருட்களைப் பயன்படுத்துவது தான் சிறந்தது. உங்கள் சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க வேண்டுமெனில், செயற்கைப் பொருட்களை விடுத்து இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவதைப் பழகி கொள்ளுங்கள். அதிலும், வீட்டில் உள்ள பொருட்களை சரியாக பயன்படுத்தினாலேயே உங்கள் அழகை நீண்ட காலத்திற்கு பாதுகாத்திடலாம். சரி இப்போது முகத்தை இயற்கையான முறையில் பராமரிக்க உதவும் வழிமுறைகளைப் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

பால்

காய்ச்சாத பச்சை பால் சருமத்தில் சேரும் அழுக்குகளை சுத்தம் செய்வதில் பெரிதும் உதவிடும். உண்மையில், இதில் காணப்படும் லாக்டிக் அமிலம் முகத்தில் உள்ள இறந்த சருமத்தை நீக்கிடும். நீங்கள் முகத்தில் தடவுவதற்கு காய்ச்சப்படாத பச்சை பாலைத் தேர்வு செய்ய வேண்டாம். ஆனால், முழு கொழுப்பு நிறைந்த பாலை உங்கள் சருமத்தில் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யவும். சிறு பஞ்சுருண்டையில் பாலை நனைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு காய விடவும். நன்கு காய்ந்ததும் மீண்டும் ஒரு முறை அல்லது இரண்டு முறை இதே போல் தடவி பின்னர், குளிர்ந்த நீரில் கழுவிடவும்.

ரோஸ் வாட்டர்

இரவில் தூங்குவதற்கு முன்பு முன் ரோஸ் வாட்டரை முகத்திற்கு பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும். தினமும் முகம் மற்றும் கழுத்தில் ரோஸ் வாட்டரைத் தடவினால் சருமத்தில் தேங்கி இருக்கும் அழுக்குகளை அது சுத்தம் செய்திடும். இரவு தூங்கும் முன்பு ரோஸ் வாட்டரை தேய்த்து அப்படியே விட்டு விடவும். காலை எழுந்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இதை சுத்தம் செய்ய உங்களுக்கு ஃபேஸ்வாஷ் அல்லது சோப்பு எதுவும் தேவையில்லை. வெறும் நீரில் முகத்தைக் கழுவினால் போதுமானது.

வெள்ளரிக்காய்

முகத்தில் ஃபேஸ்வாஷ் அல்லது சோப்பைப் பயன்படுத்த விரும்பாதவர்கள், வெள்ளரி சாற்றைப் பயன்படுத்தி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். வெள்ளரிக்காயில் குளிர்ச்சியான மற்றும் வெண்மை பண்புகள் உள்ளன. இவை, வறண்ட சருமத்தை பளபளப்பாக மாற்றும். அதைப் பயன்படுத்த வெள்ளரிக்காயை எடுத்து துருவி கொள்ளவும். இப்போது அதனை எடுத்து முகத்தில் அப்படியே வைக்கவும். வேண்டுமென்றால், வெள்ளரிச் சாற்றில் தயிர் கலந்தும் பயன்படுத்தலாம். அதை முகத்தில் வைத்த 10 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.

எலுமிச்சை

எலுமிச்சை சருமத்தைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது. மேலும், எலுமிச்சை முக கருமையைப் போக்க உதவும். அதுதவிர, உங்கள் முகத்தை சுத்தம் செய்ய எலுமிச்சை சாற்றை சிறிது பால் அல்லது தயிருடன் கலந்து முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். பின்னர், மறவாமல் மாய்ஸ்சரைத் தடவவும்.

தயிர் மற்றும் தேன்

தயிர் மற்றும் தேன் சரும அழுக்குகளை நீக்கி, சருமத்தை பொலிவாக்கும். மேலும், இதைத் தடவினால் முகம் பொலிவு பெறும். இதைப் பயன்படுத்த, 1 டீஸ்பூன் தயிரை, அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து, பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். பின்னர், முகம் மற்றும் கழுத்தில் இதைத் தடவி 5 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவவும். இவ்வாறு செய்து வர முகம் பளபளக்கும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →