Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

தலைமுடி முதல் சருமம் வரை அனைத்தையும் ஜொலிக்க செய்ய முட்டையின் இந்த பகுதியைப் பயன்படுத்துங்கள்...

தலைமுடி முதல் சருமம் வரை அனைத்தையும் ஜொலிக்க செய்ய முட்டையின் இந்த பகுதியைப் பயன்படுத்துங்கள்...

இன்றைய காலகட்டத்தில் அனைவரது வாழ்க்கையும் மிகவும் பரபரப்பாக காணப்படுவதால், ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. உடற்பயிற்சிகளுடன் நல்ல ஆரோக்கியமான உணவின் மீதும் மக்கள் கவனம் செலுத்துவது குறைவு என்பதால் தான் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். இருப்பினும், அனைவரும் ஆரோக்கியமான உணவைப் பின்பற்ற கட்டாயம் முயற்சிக்க வேண்டும். முடிந்தளவு, எது செய்வதற்கு எளிமையோ அதில் இருந்து மாற்றத்தைத் தொடங்க வேண்டும். தினமும் உணவில் முட்டை சேர்ப்பது எளிமையான ஒன்று தானே. ஏனென்றால், முட்டையில் அதிக அளவில் புரதம் உள்ளது.

முட்டையை யார் சாப்பிட்டாலும், அது கொழுப்பில்லாமல் இருக்க வேண்டுமெனில், அதன் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு சாப்பிடலாம். ஒருவேளை நீங்கள், முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சாப்பிட்டுவிட்டு மஞ்சள் கருவை தூக்கி போடுவீர்கள் என்றால், இனி அப்படி செய்யாதீர்கள். ஏனென்றால், முட்டையின் மஞ்சள் கருவை பயன்படுத்தி உங்கள் சருமம் முதல் கூந்தல் அருமையாக பராமரிக்கலாம். சரி முட்டையின் மஞ்சள் கருவை அழகு பராமரிப்பு மற்றும் வேறு எந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

ஃபேஸ் பேக்

முட்டையின் மஞ்சள் கருவை உங்களை அழகுப்படுத்தி கொள்ள தாராளமாக பயன்படுத்தலாம். இதை வைத்து நீங்கள் ஒரு சிறந்த ஃபேஸ் பேக்கை எளிதாக செய்யலாம். இந்த ஃபேஸ் பேக்கை தயாரிக்க, நீங்கள் முட்டையின் மஞ்சள் கருவை நன்கு அடித்து, பின்னர் அதை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு உலர விடவும். பின்னர், குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இப்படி வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால் உங்கள் முகம் சுருக்கங்கள் இன்றி, முக கருமை நீங்கி, பளபளப்பான தோற்றத்தைப் பெற்றிடும்.

ஹேர் கண்டிஷனர்

முட்டையின் மஞ்சள் கருயை ஹேர் கண்டிஷனராக பயன்படுத்தலாம். உண்மையில் இது உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளித்து, அதனை எப்போதும் ஈரப்பதமாக வறண்டு விடாமல் தடுத்திடும். அதுமட்டுமின்றி, முடி மென்மையாகவும், மிருதுவாகவும், வலுவாகவும் மாறும். அதற்கு, ஒரு கிண்ணத்தில் 1 முட்டையின் மஞ்சள் கருவை நன்கு அடித்து, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து, பின்னர் அதை தலை முடியில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் ஷாம்பூ போட்டு தலை முடியை அலசிடவும்.

புட்டிங் செய்ய பயன்படுத்தலாம்

வெண்ணிலா புட்டிங் செய்ய, இரண்டு முட்டைகளின் மஞ்சள் கருவை புட்டிங் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். முட்டையின் மஞ்சள் கரு சேர்ப்பதன் மூலம் புட்டிங் மிகவும் மென்மையாக மாறும்.

கேக் தயாரிக்க பயன்படுத்தலாம்

முட்டையின் மஞ்சள் கருவை கேக் மாவுடன் சேர்த்து செய்து பாருங்கள். ஏனெனில், முட்டை மஞ்சள் கரு சேர்ப்பதன் மூலம் அது கேக்கை மிகவும் பஞ்சுபோன்றதாக மாற்றுவிடும். எனவே, இனி எப்போதும் மஞ்சள் கருவை மட்டும் வீணாக தூக்கி எறிய வேண்டாம்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →