Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

கும்பத்தில் அஸ்தமனமாகும் சனியால் இந்த 3 ராசிக்காரர்களும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்…

கும்பத்தில் அஸ்தமனமாகும் சனியால் இந்த 3 ராசிக்காரர்களும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்…

Shani Asta 2023 In Aquarius: நவகிரகங்களில் சனிபகவான் நீதிமான் என்று அழைக்கப்படுபவர். அப்படிப்பட்ட சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு 2023 ஜனவரி 17 ஆம் தேதி பெயர்ச்சியானார். சனி பகவானின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. கடகம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனி ஆரம்பிக்கிறது. மேலும், சனியின் இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சிலருக்கு மோசமான பலன்களையும் அளிக்கக்கூடும்.

2023 ஜனவரி 30 ஆம் தேதி சனி கும்ப ராசியில் சூரியனுக்கு அருயே சென்று அஸ்தமனமாக இருக்கிறார். சனியின் இந்த அஸ்தமனம் சில ராசிக்காரர்களுக்கு அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வரும் ஜனவரி 30 ஆம் தேதி சனி அஸ்தமனமாவதால் எச்சரிக்கயைாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்…

கடகம்

கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாக போகிறார். இதனால் கடக ராசிக்காரர்கள் தொழில், ஆரோக்கியம் போன்றவற்றில் பல சவால்களை சந்திக்க நேரிடலாம். எனவே, கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், எந்தவொரு புதிய முதலீட்டு முடிவுகளையும் கவனமாக எடுக்கவும். ஏனெனில், இந்த நேரத்தில் உங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை கவனமாக செய்ய வேண்டும். ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்காவிட்டால், மன உளைச்சலால் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். குறிப்பிபாக, இந்த நேரத்தில் எவருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள்.

இந்த 6 ராசிக்காரர்கள் சுலபமாக எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிவிடுவார்களாம். உங்க ராசியும் இதுல இருக்கா?

சிம்மம்

சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகிறார். இந்த நேரத்தில் சிம்ம ராசிக்காரர்களின் வரவு செலவு திட்டத்தில் சில குழப்பம் ஏற்படலாம். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி அவதிப்பட நேரிடலாம். எனவே, சிக்கனத்தை கையாள வேண்டும். சனியின் அஸ்தமனம், காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக, புதிதாக எந்த வேலையையும் இந்த காலக்கட்டத்தில் தொடங்கிட வேண்டாம்.

இந்த 6 ராசிக்காரர்களுக்கு ரிக்ஸ் எடுப்பது எப்போதும் ரஸ்க் சாப்பிடுற மாதிரி தான். உங்க ராசியும் இதுல இருக்கா?

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாவதால், விருச்சிக ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லையெனில், உங்கள் பணம் திரும்ப வராமல் போகலாம். சனியின் மறைவு உங்கள் தாயாரின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடும். எனவே, இந்த நேரத்தில் அவரை மிகவும் கவனமாக பார்த்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. சனி அஸ்தமனம் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இந்த 6 ராசிக்காரர்களை என்ன செய்தாலும் புரிந்து கொள்ளவே முடியாது…

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →