Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

ரமலான் பண்டிகை 2022: ரமலான் பண்டிகையும், அதன் முக்கியத்துவங்களும்!!

ரமலான் பண்டிகை 2022: ரமலான் பண்டிகையும், அதன் முக்கியத்துவங்களும்!!

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் அனுசரிக்கப்படும் நோன்பு மற்றும் தியாகத்தின் மாதமாக புனித ரம்ஜான் மாதம் கருதப்படுகிறது. 'ரமலான்' என்ற வார்த்தை அரபு வார்த்தையான 'ரமிடா' அல்லது 'அர்-ரமடா' ல் இருந்து வந்தது. இது இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் முகமது நபியைக் கௌரவிக்கவும் சுயக்கட்டுப்பாட்டை அடையவும் முஸ்லிம்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை நோன்பு நோற்பார்கள். மொத்தத்தில், இஸ்லாமியர்கள் தங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி, சுயமரியாதை மற்றும் ஒழுக்கத்தில் கவனம் செலுத்தும் நேரமாக இது கருதப்படுகிறது.

ரமலான் பண்டிகையின் முக்கிய அம்சமாக ஏறக்குறைய ஒரு மாதம் காலம், இந்த ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் ரோசா (Roza) எனும் நோன்பை மேற்கொள்கின்றனா். அதாவது இந்த மாதம் முழுவதும் சூரிய உதயம் தொடங்கி அது மறையும் வரை பகல் நேரத்தில் உணவோ அல்லது தண்ணீரோ அருந்தாமல் கடும் நோன்பை மேற்கொள்வா். இந்த நோன்பானது ரமலான் பண்டிகையின் மையமாக இருக்கிறது. இந்த மாதத்தை, முகமது நபி அவா்களின் போதனைகளை மறுவாசிப்பு செய்வதற்கான வாய்ப்பாகவே இஸ்லாமிய மக்கள் கருதுகின்றனா். ரமலான் நோன்பானது, ஏழை எளியோருடன் தம்மை இணைத்து, அவா்கள் மீது பரிவு கொள்ள உதவி செய்வதாகவும், அல்லாஹ் அவா்களின் ஆசீா்வாதங்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவி செய்வதாகவும் இஸ்லாமிய மக்கள் நம்புகின்றனா்.

2022 ரமலான் எப்போது?

இன்றைய தினம் பிறை தென்பட்டால், ஞாயிற்றுக்கிழமை முதல் ரமலான் மாதம் தொடங்கும். எனவே, ஏப்ரல் 3 தொடங்கி, மே மாதம் 2ம் தேதி ரமலான் மாதம் முடிவடையும். அதற்கு மறுநாள் ஈத்-அல்-ஃபிதர் கொண்டாட்டம் நடைபெறும். ரமலான் மாதம் தொடங்குவதையொட்டி, வீடுகளில் இருந்து மற்ற எல்லா இடங்களிலும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறும். குறிப்பா கடைகளில் பேரிச்சம்பழங்கள், உலர் உணவுகள், பழங்கள் போன்றவை கொண்டு அலங்கரிக்கப்படும். மசூதிகள் மற்றும் வீடுகளிலும் ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறும். ஒரு மாதம் முழுவதும் கடைபிடிக்கப்படும் நீளமான நோன்பு முடிவடைவதை குறிப்பது தான் ஈத் கொண்டாட்டம். ஈத் அன்று இஸ்லாமிய மக்கள் அனைவரும் அருமையான விருந்து சமைத்து, தங்கள் உற்றாா் உறவினரோடு பகிர்ந்து உண்டு மகிழ்வா்.

நோன்பு முறை

இஃப்தாா் (Iftar) கொண்டாட்டம் என்பது ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் சூரியன் உதயத்திற்கு முன்பே எழுந்து உண்பதாகும். அப்போது தயாரிக்கப்படும் உணவு ஷெரி(Sehri) என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு விடியற்காலையில் உணவு உண்பதால், அந்த பகல் பொழுது முழுவதும் அவர்களால் உண்ணாமல், தண்ணீா் அருந்தாமல் நோன்பு இருக்க முடியுமாம். அதுதவிர், நோன்பை முடித்து மாலைத் தொழுகை முடிந்தவுடன் பாரம்பரிய உணவுகளுடன் கூடிய இஃப்தாா் (Iftar) விருந்தை உண்கின்றனா்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →