Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

புத்தாண்டு அன்னைக்கு இந்த பொருட்களை வாங்குனா செல்வம் பெருகுமாம்...

புத்தாண்டு அன்னைக்கு இந்த பொருட்களை வாங்குனா செல்வம் பெருகுமாம்...

புத்தாண்டு என்றாலே புதிய தொடக்கமாக தான் ஒவ்வொருவரும் கருதுகிறோம். அதிலும், தங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் மேம்படுத்த அதிகமாக விரும்புவோம். ஆனால் சில நேரங்களில் இந்த ஆசைகள் நிறைவேறாமல் போகலாம். இருப்பினும், சில வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம், புத்தாண்டில் உங்கள் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றலாம். மேலும், உங்கள் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும். உண்மையில், வாஸ்து சாஸ்திர விதிகளின்படி, புத்தாண்டின் முதல் நாளில் சில பொருட்களை வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதைப் பற்றி இப்போது சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்…

ஸ்வஸ்திக் சின்னம்

முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானே ஸ்வஸ்திக் சின்னத்தில் வீற்றிருப்பதாக ஐதீகம். அதனால்தான் இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கண்டிப்பாக தங்கள் வீட்டு வாசலில் ஸ்வஸ்திக் அடையாளத்தை வைப்பார்கள். இந்த சின்னம் மிகவும் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. இதனுடன், புத்தாண்டின் முதல் நாளில் ஸ்வஸ்திக் சின்னம் அல்லது அதன் படத்தை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

மயில் இறகு

உறங்கி கொண்டிருக்கும் அதிர்ஷ்டத்தைத் தட்டி எழுப்ப வேண்டுமானால், புத்தாண்டின் முதல் நாளில், வீட்டில் மயில் இறகுகளை வைக்க வேண்டும் என்பது ஐதீகம். இதன் மூலம் உங்கள் அதிர்ஷ்டம் உயரும் மற்றும் நீங்கள் வாழ்க்கையில் மென்மேலும் முன்னேறுவீர்கள். எனவே, புத்தாண்டின் முதல் நாளில் கண்டிப்பாக மயில் இறகுகளை வாங்கி வீட்டிற்கு கொண்டு வாருங்கள்.

யானை சிலை

புத்தாண்டில் யானை சிலை வாங்குவதும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் ராகு மற்றும் கேதுவின் தோஷம் இருந்தால், வீட்டில் வெள்ளி யானை சிலையை நிறுவ வேண்டும் என்று கூறுவர். இது அவர்களின் தீய விளைவைக் குறைப்பது மட்டுமல்லாமல், உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வருமாம். வெள்ளி யானை சிலையை வாங்க முடியாவிட்டாலும், நம்மால் முடிந்த வியாநகர் சிலையை வாங்கி வைக்கலாம்.

ஆமை

பொதுவாகவே, ஆமை புகுந்த வீடு விளங்காது என்ற ஒரு மூட நம்பிக்கை நம்மில் கலந்துவிட்டது. ஆனால், ஆமையால் வீட்டில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு கூடும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். இது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திலும் சாதகமான விளைவை ஏற்படுத்தும். பல நேரங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் ஆமையின் சிலை அல்லது படத்தை பரிசாக வழங்குவதைப் பார்த்திருப்பீர்கள். எனவே, புத்தாண்டின் முதல் நாளில், உங்கள் வீட்டிற்கு ஆமை சிலையையும் வாங்கி வைப்பதன் மூலம் ஆரோக்கியம் மட்டுமில்லாது, குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

தேங்காய்

சிவபெருமான் தேங்காயில் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அதனால்தான் ஒவ்வொரு சுப காரியங்களிலும் தேங்காய் முக்கிய இடம் வகிக்கிறது. புத்தாண்டின் முதல் நாளன்று வீட்டிற்கு தேங்காயை கொண்டு வந்தால், பணத்திற்கு ஒருபோதும் பஞ்சமே இருக்காது. எனவே இந்த ஆண்டு, புத்தாண்டின் முதல் நாளில், நீங்கள் கண்டிப்பாக உங்கள் வீட்டிற்கு தேங்காய் கொண்டு வர வேண்டும்.

கிளியின் படம்

கிளி மிகவும் புனிதமான பறவையாக கருதப்படுகிறது. இந்த பறவையின் படம் வீட்டில் வைக்கப்பட்டால், அது முழு குடும்பத்திற்கும் மிகவும் நல்ல விளைவை ஏற்படுத்தும். கிளி அதிர்ஷ்டத்தைத் தரும் என்பது ஐதீகம். குறிப்பாக ஜோடி கிளிகளின் புகைப்படத்தை வீட்டில் வைப்பதன் மூலம், அதன் பலன் இரு மடங்காக அதிகரிக்குமாம்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →