Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

மாத ராசிபலன் (மே 2022): இந்த 5 ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது...

மாத ராசிபலன் (மே 2022): இந்த 5 ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது...

மே மாதம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. மே மாதத்தில் பல பெரிய கிரகங்கள் ராசியை மாற்ற போகின்றன. மே 10-ம் தேதி புதன் தனது ராசியை மாற்றுகிறார். அதன் பிறகு மே 15-ம் தேதி சூரியன் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். அதன் பிறகு செவ்வாய் மீன ராசியிலும், சுக்கிரன் மேஷ ராசியிலும் சஞ்சரிக்க போகிறார்கள். இது தவிர, மே 13ம் தேதி முதல் புதன் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வருவார். எனவே, ஒவ்வொரு கிரக நிலைகளின் அடிப்படையில் ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன் மாறும். எனவே, மே மாத கிரக நிலைகளின் அடிப்படையில், சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களை காத்திருக்கின்றன. எனவே, எந்தெந்த ராசிகளுக்கு மே மாதம் யோகம் நிறைந்ததாக இருக்க போகிறது என்பதை இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

ரிஷபம்
மே மாதம் உங்களுக்கு வேலையில் மிகவும் சாதகமானதாக இருக்கும். இந்த மாதம் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் நிச்சயம் கிடைக்கும். அதுதவிர, வருமானமும் அதிகரிக்கும். இந்த மாதம் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரப்போகின்றன. திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். பொருளாதார நிலை உங்கள் பக்கம் வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்க வலுவான வாய்ப்புள்ளது. வேலையில் உங்களுக்கு இருந்த பெரிய சவால்களில் பெரிய வெற்றி பெறலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்களுக்கு இந்த மாதம் மிகவும் நல்லதாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் பேச்சுதிறனால் அலுவலகத்திலோ அல்லது வெளியிடத்திலோ பிறரது மனதை வெல்வீர்கள்.

சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் மே மாதத்தில் நல்ல சுப பலன்களைப் பெறலாம். காதல் மற்றும் தொழில் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீண்ட கால கடின உழைப்புக்கு ஏற்ற சரியான பலன் இந்த நேரத்தில் கிடைக்கும். இந்த நேரம் ஆரோக்கியத்திற்கு மிகவும் சாதகமானது. அதுதவிர, உத்தியோக ரீதியான பயணங்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி காணும் நேரமாக இந்த மே மாதம் உங்களுக்கு அமைய போகிறது.

கன்னி
படித்து முடித்து நீண்ட காலமாக வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் பல நல்ல வாய்ப்புகளை தேடி கொடுக்கும். மறுபுறம், வியாபாரிகளுக்கு தங்களது தொழில் லாபமும் அதிகரிக்கக்கூடும். உங்களது கடின உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயம் இந்த காலக்கட்டத்தில் கிடைக்கும். உங்களது பொருளாதார நிலையும் முன்பை விட மேம்படும். மேலும், நண்பர்களின் உதவியால், தடைப்பட்ட சில வேலைகளை வெற்றிகரமாக முடிக்க முடியும். புதிய நபர்களின் நட்பும் உங்களுக்கு கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் நிதி சார்ந்த பிரச்சனைகள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். உங்களது கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும். மேலும், திருமணமானவர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடலாம். பழைய கடனில் இருந்தும் விடுபடலாம். நிதி நிலை ஏற்றம் முன்னேற்றம் மிகுந்த மனநிறைவை கொடுக்கும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →