Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

உங்க ராசிப்படி 2022ல் இந்த விஷயங்கள்ல மாத்திகிட்டா உங்க லைஃப் வேற லெவல்ல இருக்கும்..

உங்க ராசிப்படி 2022ல் இந்த விஷயங்கள்ல மாத்திகிட்டா உங்க லைஃப் வேற லெவல்ல இருக்கும்..

ஒவ்வொரு புது வருடம் தொடங்கும் போது, கடவுளே இந்த வருஷமாவது எனக்கு எல்லாம் நல்லதாவே நடக்கனும்பா என்று தான் வேண்டுவோம். எனவே, வரவிருக்கும் 2022 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறந்த ஆண்டாக அமைய விரும்பினால், உங்கள் ராசியின் அடிப்படையில் நீங்கள் சில மாற்றங்களைச் செய்தாக வேண்டும். ஒவ்வொருவருக்கும் பலம் மற்றும் பலவீனம் என எதாவது இருக்கும். ஆனால், ஒவ்வொருவருக்கும் இது வேறுபடும். எனவே, இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றிகராமானதாக அமைய நீங்கள் சில விஷயங்களை மாற்றி கொண்டாலே போதும். இப்போது நாம் அதைப் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த சிறு சிறு மாற்றங்களை, சிறு சிறு விஷயங்களை செய்வதன் மூலம் உங்களது வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டு சிறப்பாக வாழ்வீர்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே வருகின்ற 2022ஆம் ஆண்டு நீங்கள் பொறுமையாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களின் மனக்கிளர்ச்சி அடிக்கடி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, கோபத்தைத் தவிர்த்திடுங்கள். மேலும், எந்தவொரு முக்கியமான முடிவு எடுப்பதற்கு முன்பும் பல முறை யோசியுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, 2022ல் நீங்கள் சுதந்திரமாக வாழ்வதில் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக நீங்கள் எப்போதும் பிறரையே சார்ந்திருப்பீர்கள். அதுவே, இத்தனை நாளாக உங்களது பின்னடைவிற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இனிமேல், சுதந்திரமாக, தன்னிச்சையாக வாழ பழகுங்கள். உங்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவுகளை நீங்களே சுயமாக எடுக்க கற்றுக் கொள்ளுங்கள்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, 2022ல் எந்தவொரு வேலையையும் திட்டமிட்டு முறையாக செய்வதில் கவனம் செலுத்துங்கள். பொதுவாக, உங்களது வழக்கம் இதற்கு நேர்மாறானது. எதையும், திட்டமிடாமல் சற்று குழப்பமான மனநிலையிலேயே செய்திடுவீர்கள். இதனால் ஏராளமான பிரச்சனைகளையும் சந்தித்திருப்பீர்கள். எனவே, இந்த புது வருடத்தில் இருந்தாவது எதை செய்தாலும் திட்டமிட்டு முழு கவனத்துடன் செய்து பாருங்கள் வெற்றி உங்கள் வசம் வந்து சேரும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள், 2022 ஆம் ஆண்டில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். சில சமயங்களில் உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லாமல் போகலாம். உங்களது திறமை உங்களுக்கே தெரியாமல் பல வெற்றிகளைத் தவறவிட்டு இருப்பீர்கள். நம்பிக்கையின்மையே உங்களது வளர்ச்சிக்கு இத்தனை நாளாக தடையாக இருந்து வந்தது. எனவே, இந்த வருடத்தில் இருந்து முழு நம்பிக்கையுடன், நேர்மறையாக இருந்து முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் வெற்றி கிட்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, 2022ல் இருந்தாவது மற்றவர்கள் பேசுவதையும் சற்று காது கொடுத்து கேளுங்கள். உங்களது குணாதிசயம் என்னவென்றால், பிறரை பேச விடாமல் நீங்கள் மட்டுமே பேசுவது. இதனால், நீங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து இருப்பீர்கள். எனவே, இனிமேலாவது பிறருடன் பேசும் போது, அவர்களது கருத்திற்கும் மதிப்பு கொடுத்து கேளுங்கள். இதனால், உங்களை சுற்றியுள்ளோரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, 2022 ஆம் ஆண்டு உங்களது நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முயற்சியுங்கள். நீங்கள் எப்போதும் ஒரு விஷயத்தை எதிர்மறையான கண்ணோட்டத்திலேயே பார்ப்பீர்கள். இதனால் உங்களால் அதன் நேர்மறை முடிவுகளை பார்க்க முடியாமலேயே போய்விடும். இனி வரும் காலமாவது, நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு நேர்மறை எண்ணத்துடன் முன்னேறினால் வாழ்க்கையின் சுவாரஸ்யமான பக்கத்தைக் காண்பீர்கள்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே, 2022-ல் எந்தவொரு முடிவையும் தீர்க்கமாக எடுப்பதில் கவனம் செலுத்தவும். ஒரு விஷயத்தைப் பற்றி அளவிற்கு அதிகமாக யோசிக்கும் உங்களது பழக்கத்தால் இறுதி முடிவு எடுக்க முடியாத நிலைக்கு வழிவகுக்கும். வருகின்றன புது வருடத்தில் இருந்தாவது. நம்பிக்கையுடன், விரைவாக முடிவெடுக்க முயற்சி செய்யுங்கள். இதன்மூலம், உங்களது வாழ்க்கை மிகவும் எளிமையானதாக இருப்பதை உணர்வீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, 2022-ல் பிறரை மன்னிக்கும் குணம் கொண்டவராக மாற முயற்சிக்க வேண்டும். நீங்கள் நீண்ட காலமாக வெறுப்புணர்வைக் கொண்டிருப்பதால், அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். விட்டு கொடுத்து செய்ய முயற்சியுங்கள். உங்களுக்கு தீங்கு செய்தவர்களையும் மன்னித்து விடுங்கள். இது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, 2022ல் பொறுமையாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். எந்தவொரு வேலையையும் அவசர அவசரமாக செய்வதால் அது முழுமையடையாமல் போய் விரக்தியடையக்கூடும். இவை வீண் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். விஷயத்தை அதன் போக்கில் விட்டு பாருங்கள். அவை சுமூகமாக முழுமையடைவதோடு, உங்களுக்கும் மன அமைதி கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே, 2022 ஆண்டில் சமூகத்துடன் ஒன்றி வாழ்வதில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் அடிக்கடி சமூக சூழ்நிலைகளில் இருந்து விலகி ஒதுங்கி இருப்பீர்கள். இது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, உங்களது இயல்பை மாற்றி சமூகத்துடன் ஒன்றி வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் நினைத்ததை விட அதிகமாக இதனை ரசிப்பதை உணரலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, 2022ஆம் ஆண்டில் இருந்தாவது வாழ்வில் ஒழுக்கத்தை கொண்டு வர முயற்சிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் கொஞ்சம் குழப்பமாகவும், ஒழுக்கமின்மையுடனும் இருப்பீர்கள். இது உங்கள் வாழ்வில் தேவையில்லாத பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இனியாவது, ஒரு வழக்கத்தைக் கொண்டு வர முயற்சித்து, அதனை முறையாக கடைபிடிக்கவும். இதன்மூலம், உங்கள் வாழ்க்கை மிகவும் எளிமையானதாக மாறுவதை நீங்கள் உணர்வீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களே, 2022 ஆம் ஆண்டில் வாழ்வை ஒழுங்கமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எந்தவொரு விஷயத்தையும் திட்டமிடாமல் செய்வது, வீணாக்குவது என இத்தனை நாளாக இருந்து விட்டீர்கள். இதனால், பல பிரச்சனைகளையும் சந்தித்து இருப்பீர்கள். எனவே, உங்களுக்கென ஒரு பாதையை தேர்வு செய்து அதனை ஒழுங்காக கடைபிடித்து வாழ முயற்சிக்கவும். இதனால், உங்க்ள வாழ்க்கை அழகாக மாறுவதை காண்பீர்கள்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →