Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

வரும் வாரத்தில் நிகழும் 3 பெரிய கிரகங்களின் ராசி மாற்றத்தால் 12 ராசிகளிலும் உண்டாகும் தாக்கம்...

வரும் வாரத்தில் நிகழும் 3 பெரிய கிரகங்களின் ராசி மாற்றத்தால் 12 ராசிகளிலும் உண்டாகும் தாக்கம்...

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. கிரகங்களின் ராசியில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளுக்கும் நல்ல மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சில நாட்களுக்குப் பிறகு புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றப் போகின்றன. ஏப்ரல் 25ம் தேதி புதன் ராசி பெயர போகிறார். ஏப்ரல் 27ம் தேதி சுக்கிரன் ராசி மாறுகிறார். இதன் பிறகு ஏப்ரல் 29-ம் தேதி சனிபகவான் ராசி மாறுகிறார். புதன், சுக்கிரன், சனி ஆகிய பெரிய கிரகங்களின் ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளின் நிலையும் எப்படி இருக்கப்போகிறது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

மேஷம்
இனம் புரியாத பயத்தால் நீங்கள் இந்த காலக்கட்டத்தில் மிகவும் சிரமப்படுவீர்கள். நிதானமாக இருந்து வேலைகளை முறையாக செய்தால், பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். மேலும், கல்விப் பணிக்காக நீங்கள் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தங்களது மன அமைதிக்காக இந்த காலக்கட்டத்தில் பாடுபட வேண்டாம். அமைதியான சூழல் நிலவும் உத்தியோகஸ்தர்களுடன் உங்களுக்கு இணக்கம் இருக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது.

மிதுனம்
இந்த காலக்கட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நண்பரிடமிருந்து வணிகச் சலுகையை நீங்கள் பெறலாம். இது தக்க தருணத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும். நிதி நிலையில் நெருக்கடி ஏற்படக்கூடும். எனவே, சேமிப்பில் கவனம் செலுத்தவும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மன மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால், உங்கள் வாழ்க்கையில் நிலைமைகள் சற்று வேதனை தரக்கூடியதாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு பாதகமான சூழ்நிலையில் கிடைக்கும். செலவுகள் அதிகமாக இருக்கலாம். எனவே, வீண் செலவுகளைக் குறைக்க முயற்சிப்பது நல்லது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் தன்னம்பிக்கை குறையும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வருமானம் மேம்படும். உங்கள் நண்பரின் ஆதரவால் மிகவும் ஆதாயம் பெறலாம். இந்த நேரத்தில் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இல்லையெனில், சிக்கல் உண்டாகலாம்.

கன்னி
தனிப்பட்ட வாழ்க்கையில் கன்னி ராசிக்காரர்களுக்கு மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். ஆனால், பேச்சுவார்த்தையின் போது நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகளுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் மன அமைதி பெற முயற்சிப்பது நல்லது. தேவையற்ற மனஅழுத்தம் உங்கள் மனநிலையைக் கெடுக்கும். வியாபாரிகள், தொழில் நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலை சுமை அதிகமாக இருக்கும். இதனால் உடற்சோர்வு உண்டாகும்.

விருச்சிகம்
நம்பிக்கை மற்றும் விரக்தியால் உங்கள் மனதில் அமைதி நிலவும். பாதகமான சூழலில் நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பொழுதுபோக்கில் உங்கள் நாட்டம் அதிகரிக்கலாம். நண்பரின் உதவியால் பண வரவைப் பெறுவீர்கள். இதனால் நிதி நெருக்கடியை சுலபமாக சமாளித்திட முடியும். மேலும், பழைய கடனையும் திருப்பி செலுத்திடலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த காலக்கட்டத்தில் மிகவும் நிதானமாக இருக்க வேண்டும். உங்கள் மனம் தேவையில்லாமல் அலைக்கழிக்கப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் முழு ஆதரவும் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஆனால், உங்கள் துறையில் மாற்றம் ஏற்படலாம்.

மகரம்
வியாபாரிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலமிது. ஆனால், மனதில் ஏற்றத் தாழ்வுகள் அதிகமாக நிறைந்திருக்கும். இந்த காலக்கட்டத்தில் புது வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகலாம். நண்பரின் உதவியால் புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இதனால் உங்கள் நிதி சிக்கல்கள் அனைத்தும் தீரும். வாழ்வில் மகிழ்ச்சி கூடும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். அதிலும், இந்த காலக்கட்டத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். புது வாகன யோகமும் உண்டாகும். உங்களுக்கு திடீர் வருமானமும் அதிகரிக்கும். ஆனால், உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

மீனம்
இந்த காலக்கட்டத்தில் உங்கள் மன அமைதி அதிகரிக்கும். கல்விப் பணிகளில் மகிழ்ச்சியான முடிவுகள் கிடைக்கும். வேலை சுமை அதிகமாக இருக்கலாம். இதனால், மனஅழுத்தம், உடற்சோர்வு ஏற்படலாம். எதிர்பாராத திடீர் செலவுகளால் உங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படலாம். பிறருடன் பேசும் போது இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →