Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

ஏப்ரல் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளும், அதனால் பலனடைய போகும் ராசிக்காரர்களும்...

ஏப்ரல் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளும், அதனால் பலனடைய போகும் ராசிக்காரர்களும்...

கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் ஏப்ரல் மாதம் சிறப்புமிக்கதாக இருக்கப் போகிறது. அதிலும், இந்த மாதம் பல கிரகங்களின் ராசி மாற்றம் நடைபெற போகிறது. இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை உள்ளவர்களுக்கு இருக்கும். கிரகங்களின் நிலை மாற்றம் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு நிதிப் பிரச்சனைகள் வரக்கூடும். சில ராசிக்காரர்களின் நீண்ட கால பிரச்சனைகள் இந்த கிரக மாற்றங்களாலும் நீங்கும். ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த ராசிகளுக்கு பெயர்ச்சி ஆகின்றன, அவற்றால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்க போகிறது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம். உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

ஏப்ரல் 2022 இல் நிகழவிருக்கும் கிரக பெயர்ச்சிகள்

  • 7.4.2022 - செவ்வாய் கும்ப ராசியில் சஞ்சரிக்க போகிறார்
  • 8.4.2022 - புதன் மேஷ ராசிக்குள் நுழைகிறார்
  • 12.4.2022 - ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் சஞ்சரிக்க போகிறார்கள்
  • 13.4.2022 - குரு மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்
  • 14.4.2022 - சூரியன் மேஷ ராசிக்கு செல்கிறார்
  • 25.4.2022 - புதன் ரிஷக ராசிக்கு மாறுகிறார்
  • 27.4.2022 - சுக்கிரன் மீன ராசிக்கு சஞ்சரிக்க போகிறார்
  • 29.4.2022 - சனி கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார்

அற்புதமான பலன்களைப் பெறப்போகும் ராசிக்காரர்கள்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கப்போகிறது. இந்த நேரத்தில் உங்கள் ராசியில் சனி பார்வையின் பலன் கிடைக்கப்போகிறது. சனியின் ராசி மாற்றத்தால், உங்களுக்கு சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த வேலைகள் அனைத்தும் இந்த மாதம் முடிவடையும். உத்தியோக முன்னேற்றம் குறித்த புதிய செய்திகள் உங்களைத் தேடி வரப்போகிறது. திருமணமாகாதவர்களுக்கு, அவர்களது திருமணத்தில் இருந்த அனைத்து தடைகளும் நீங்கி விரைவில் உங்கள் திருமணம் கைக்கூடும். அதுதவிர, புதுபுது வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். இதனால் உங்கள் நிதி நிலையில் மாபெரும் மாற்றத்தைக் காணலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வேலையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதிலும், அரசு ஊழியர்களுக்கு இந்த காலத்தில் இட மாற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம். இதுதவிர, அலுவலகத்தில் உங்கள் மீதான மரியாதையும் அதிகரிக்கும். திடீர் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு ரூபத்தில் முன்னேற்றம் சாத்தியமாகும். இந்த நேரத்தில் நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்குவது பற்றியும் யோசிக்கலாம். அந்த திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவும் முடியும். தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பேசினால், உங்கள் வீட்டில் வசதி வாய்ப்பிற்கான முக்கியப் பொருட்களையும் வாங்கலாம்.

மகரம்

சனி பகவான் மகர ராசியில் இப்போது இருக்கிறார். அவர், ஏப்ரல் 29-ம் தேதி உங்கள் ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறார். இந்த காலமாக உங்கள் ராசியில் இருந்துவந்த சனிபகவானால் நீங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கலாம். நிதி நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிட்டிருக்கலாம். ஆனால், சனியின் இந்த ராசி மாற்றம் உங்களுக்கு பண விஷயத்தில் மிகவும் சாதகமாக இருக்கும். நிதி சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரப்போகிறது. மேலும், அதிர்ஷ்டமும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய வாய்ப்புகளால் நல்ல பலனைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →