Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் 25ம் தேதி முதல் இந்த ராசிக்காரர்களின் ராஜ்ஜியம் தான்...

புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் 25ம் தேதி முதல் இந்த ராசிக்காரர்களின் ராஜ்ஜியம் தான்...

ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது வழக்கம். கிரகங்களின் இத்தகைய ராசி மாற்றம் மனித வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புதன் பகவான் புத்தி மற்றும் வணிகத்திற்கான அதிபதியாக கருதப்படுகிறார். ஏப்ரல் 25 ஆம் தேதி புதன், சுக்கிர பகவானின் சொந்த ராசியான ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, புதன் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தந்திடும். அந்த வகையில், புதனின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்க போகிறம். அந்த ராசிகளைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

மேஷம்
புதனின் ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. அதிலும், புதன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது பணம் மற்றும் பேச்சு ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறலாம். வியாபாரத்தில் ஒரு புதிய ஒப்பந்தத்தையும் பெற்றிட முடியும். உங்கள் மூன்றாவது மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதி புதன் என்பதால், புதனின் இந்த ராசி மாற்றம் உங்கள் ராசிக்கு மேலும் பலம் சேர்க்க போகிறது. மேலும், உடன்பிறந்தோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி நன்மை பயக்கும் விதமாக அமைய போகிறது. புதன் உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் சஞ்சரிக்கிறார். இது வருமானம் மற்றும் தொழில் ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் வியாபாரிகள் தங்கள் தொழிலில் மாபெரும் வெற்றி பெறலாம். அதுதவிர, வாகனம் மற்றும் வீடு வாங்கும் யோகமும் உண்டாகலாம். இதனால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள். பெற்றோருடனான உங்களது உறவு மேலும் மேம்படும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்துவந்த எதிரிகள் அனைவரையும் வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த ராசி மாற்றத்தால் ஆதாயம் உண்டாக போகிறது. புதன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது தொழில் மற்றும் வேலை ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த நேரத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு தங்களது வணிகத்தை மேம்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தில் உங்களின் பணி மேம்படும். அலுவலகத்தில் நீங்கள் பாராட்டு மழையில் நனையலாம். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள். தடைப்பட்ட பணத்தை மீட்டெடுக்க முடியும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →