Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

பகல் நேரத்தில் தூங்கினால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமாம். உங்களுக்கு அந்த பழக்கம் இருக்கா?

பகல் நேரத்தில் தூங்கினால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமாம். உங்களுக்கு அந்த பழக்கம் இருக்கா?

இன்றைய பரபரப்பபான வாழ்க்கை முறையில், ஒவ்வொருவரும் தங்களுக்கு இரண்டு நிமிட ஓய்வு கிடைத்திடாதா என்று விரும்புகிறார்கள். அப்படி ஒருவருக்கு ஏதேனும் இடைவேளை கிடைத்தால் அதில் செய்ய ஆசைப்படும் ஒரே விஷயம், சிறிது நேரம் நிம்மதியாக தூங்க வேண்டும். அதுவே, மதியம் உணவிற்கு பிறகான தூக்கம் என்பது மிகவும் வசதியான ஒன்றாக இருக்கும். குறிப்பாக, வீட்டில் உள்ள பெண்களுக்கு வீட்டு வேலைகளை செய்து முடித்து களைத்து போய் மதிய வேளையில் சிறிது தூங்குவதை பழக்கமாக கொண்டிருப்பர். ஆனால், அப்படி மதிய வேளையில் தூங்குவது மிகவும் தீங்கு விளைக்கக்கூடியது என்பது உங்களுக்கு தெரியுமா?

லட்சுமி தேவியின் கோபம்

நீங்கள் லட்சுமி தேவியின் பக்தராக இருந்தால், அவருடைய பரிபூரண அருளைப் பெற விரும்பினால் மதிய நேரத்தில் தூங்குவதைத் தவிர்த்திட வேண்டியது அவசியம். மத சாஸ்திரங்களின்படி, மதிய நேரத்தில் தேவையில்லாமல் தூங்குவது தீங்கு விளைவிக்கும். இருப்பினும், மதியத்தில் தூங்குவது குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிப்பதில்லை. எனவே, பகலில் தூங்குவது ஏன் உங்களுக்கு மிகவும் ஆபத்தானது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

மழைக்காலத்தில் இந்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்த்திடுவது நல்லதாம்…

பகல் தூக்கம் ஆபத்தானது

இந்து மதத்தின் சாஸ்திரங்களின்படி பகலில் தூங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனாலும், சிறு குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் போன்றவர்கள் பகலில் தூங்க விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஆரோக்கியமான நபருக்கு, பகலில் தூங்குவது ஒருவருக்கு அழிவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால், அவர்களது வாழ்க்கையில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கக்கூடும். மதியம் அல்லது மாலை நேரத்தில் அனைத்து தெய்வங்களும் பூமியில் தங்கியிருப்பதாகவும், இந்த நேரத்தில் தூங்குபவர்கள் தெய்வங்களின் ஆசீர்வாதத்தை இழக்கிறார்கள் என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மாலை வேளையில் வீட்டில் கடவுள் வழிபாடு செய்ய வேண்டும். இது உங்கள் வீட்டின் துரதிர்ஷ்டத்தை நீங்கி ஆரோக்கியத்தில் நல்ல பலனைத் தரும்.

உதட்டு வறட்சி முதல் பாத வெடிப்பு வரை அனைத்தையும் சரி செய்திட இந்த ஒரு பழம் போதும்…

எப்போதெல்லாம் தூங்கக்கூடாது

நாளின் சில நேரங்கள் சிறப்பு நேரங்களாக வேதங்களில் கூறப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் தூங்குவது கெட்ட சகுனமாகக் கருதப்படுகிறது. சூரிய உதயத்திற்குப் பிறகு தூங்குவது அசுபமாகக் கருதப்படுகிறது மற்றும் இந்த நேரத்தில் தூங்குவது உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து திறந்த வெளியில் நடைபயிற்சி செய்வது ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் நல்லது. மேலும், இந்த நேரத்தில் எழுந்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும். எனவே, மதியம் முதல் மாலை வரையிலான நேரம் சாஸ்திரங்களின்படி தூங்குவதற்கு அசுபமானது மட்டுமல்ல, அது உங்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான நோய்களையும் உண்டாக்கும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →