Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

கிரக தோஷங்களில் இருந்து தப்பிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்...

கிரக தோஷங்களில் இருந்து தப்பிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்...

சில உணவுகளை உட்கொள்வது கிரகங்களின் தீங்கு விளைவிக்கும் பாதகமான விளைவுகளைக் கூட வலுப்படுத்தவும் குறைக்கவும் முடியும். இது பலரும் அறிந்திராத ஒரு விஷயம். ஒவ்வொரு கிரகங்களுக்கும் என ஏற்ற உணவுகள் உள்ளன. இவற்றை சாப்பிட்டால், ஜாதகத்தில் மிகவும் தோஷமான கிரகங்கள் கூட சாதகமான பலன்களைத் தர ஆரம்பிக்கும் என்கிறது ஜோதிடம். உணவு ஜோதிடத்தைப் பயன்படுத்தி, வெவ்வேறு கிரகங்களிலிருந்து சாதகமான பலன்களைப் பெற்றிடலாம். குறிப்பாக உங்கள் ராசியில் கிரக நிலைகள் பலவீனமான நிலையில் இருக்கும்போது, உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். அதன்படி, ஒவ்வொரு கிரகத்திற்கு ஏற்ற உணவுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

சூரியன்
வெற்றி, நம்பிக்கை, மரியாதை மற்றும் ஆரோக்கியத்திற்கான கிரகம் சூரியன். ஜாதகத்தில் சூரியனை வலுப்படுத்த, ஒருவர் தங்களது உணவில் கோதுமை, மாம்பழம் மற்றும் வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்.

சந்திரன்
சந்திரன் ஒருவரது மனநிலை மாற்றத்திற்கான காரணமானவர். அத்தகைய சந்திரனின் நல்ல பலன்களைப் பெற, கரும்பு, சர்க்கரை, பால், பால் பொருட்கள், ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகளை சாப்பிடுங்கள்.

குரு
ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இந்த கிரகம் வலுவாக இருந்தால், ஒருவரது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நல்ல அதிர்ஷ்டத்தை அடைவார். உங்கள் ஜாதகத்தில் குருவின் ஸதானத்தை பலப்படுத்த, உளுத்தம்பருப்பு, சோளம், வாழைப்பழம், மஞ்சள், கல் உப்பு, பருப்பு வகைகள் மற்றும் மஞ்சள் நிற பழங்களை சாப்பிடுங்கள்.

ராகு மற்றும் கேது
ஒருவரது ஜாதகத்தில் ராகு மற்றும் கேதுவின் நிலை மோசமாக இருந்தால் அவர்கள் வாழ்வில் எதிர்மறை விளைவுகளால் தொடர் அவதிக்கு உள்ளாக நேரிடும். அதனை தவிர்க்க உங்கள் உணவில் உளுத்தம் பருப்பு, எள் மற்றும் கடுகு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

புதன்
புதன் ஒருவரது அறிவுத்திறன், வணிகம் மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். இது உங்களுக்கு பாதகமான முடிவுகளைத் தருவதாக இருந்தால், உடனடி நல்ல பலன்களைப் பெற பட்டாணி, பார்லி, குல்பி, பச்சை பயறு வகைகள், மூங்கில் அரிசி மற்றும் பச்சை காய்கறிகளைச் சாப்பிடுங்கள்.

சுக்கிரன்
சுக்கிரன் மகிழ்ச்சி, அழகு, செழுமை மற்றும் மகிழ்ச்சியான சூழலுக்கான கிரகம். திரிபலா, பருப்பு, சர்க்கரை, சர்க்கரை மிட்டாய், முள்ளங்கி, வெள்ளை நிற கிழங்கு ஆகியவற்றைச் சாப்பிட்டு வர சுக்கிரனின் சுப பலன்கள் கிடைக்கும்.

சனி
சனி பகவான் ஒருவரது ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தால், அவர்களுக்கு உடல், மனம் மற்றும் நிதி நிலைமையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். நல் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சனி பகவானின் பூரண அருள் தேவை. இதற்கு எள், உளுத்தம் பருப்பு, கருப்பு மிளகு, கடலை எண்ணெய், ஊறுகாய், கிராம்பு, கருப்பு உப்பு ஆகியவற்றை உட்கொள்வது அவசியம்.

செவ்வாய்
எவர் ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதோ அவர்களுக்கு திருமண வாழ்க்கை, நிலம், சொத்து தொடர்பான பிரச்சனைகள் உண்டாகக்கூடும். எனவே, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தங்களது உணவில் வெல்லம், உளுத்தம் பருப்பு, மாதுளை, பார்லி, தேன் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது பாதகமான விளைவுகளைக் குறைக்க உதவிடும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →