Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

முதுகில் பரு வந்து படுத்தி எடுக்குதா? இத ஃபாலோ பண்ணுங்க எல்லாம் சரியாகிடும்...

முதுகில் பரு வந்து படுத்தி எடுக்குதா? இத ஃபாலோ பண்ணுங்க எல்லாம் சரியாகிடும்...

முகத்தில் பரு வருவது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் பலரும் முதுகில் பரு பிரச்சனையால் பெரிதும் அவதிப்படுகிறார்கள். இது முற்றிலும் சாதாரண பிரச்சனை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதன் காரணமாக, பெண்களால் லோ நெக் ஆடைகளை அணிவது மிகவும் சங்கடமானதாக இருக்கும். முதுகில் பரு ஏற்படுவதற்கான காரணம் என்றால், அதிகப்படியான எண்ணெய் பசை, பாக்டீரியா மற்றும் இறந்த சரும செல்கள் ஆகியவை சரும துளைகளில் சேர்வதன் காரணமாக, சிவத்தல், வீக்கம் மற்றும் சிறு கொப்புளம் ஏற்படுத்தும் போது, அவை முதுகில் முகப்பருக்களை ஏற்படுத்தக்கூடும். இது மட்டுமின்றி, ஹார்மோன் மாற்றங்களாலும் முதுகில் பரு ஏற்படலாம். உங்களுக்கும் இந்த பிரச்சனை இருந்தால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை சரியாக பின்பற்றினால் விரைவில் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். சரி வாருங்கள் அந்த குறிப்புகளை இப்போது தெரிந்து கொள்வோம்…

அடிக்கடி பெட்ஷீட்டை மாற்றவும்

வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறையாவது உங்கள் மெத்தை விரிப்புகளான பெட்ஷீட்டை மாற்ற வேண்டியது அவசியமான ஒன்று. ஏனென்றால், இறந்த சரும செல்கள் மற்றும் பாக்டீரியாக்கள் ஒரே இரவில் அவற்றின் மீது எளிதில் குவிந்து சருமத்தில் எரிச்சலையும், ஒருவித அரிப்பையும் ஏற்படுத்தும். அதனால்தான் அடிக்கடி மெத்தை விரிப்புகளை மாற்ற வேண்டுமென்று கூறப்படுகிறது. முதுகில் பரு இருக்கிறதோ இல்லையோ, கட்டாயம் மெத்தை விரிப்புகளை அடிக்கடி மாற்றுவதை பழகி கொள்ளுங்கள்.

அன்றாடம் பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்

எப்போதும் காலை உங்கள் பணிகளை தொடங்கும் முன்பு உங்களுக்கென சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் உங்கள் சருமத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். சன்ஸ்க்ரீன், பாடி லோசன், கண்டிஷனர் என உங்கள் சருமத்தை பாதுகாப்பதற்கான ஏதாவது ஒன்றை தினந்தோறும் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம், உங்கள் சரும துளைகள் அடைக்கப்பட்டு அதில் அழுக்குகள், பாக்டீரியாக்கள் சேருவரு தடைப்படும். இந்த பழக்கம் உங்களுக்கு இல்லை என்றால், இனிமேல் அதைப் பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். அப்போது தான் சருமத்தை பாதுகாக்க முடியும்.

முடி மற்றும் சருமப் பராமரிப்பு

நீங்கள் எப்போது தலைக்கு குளித்தாலும் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், தலைக்கு குளிக்கும் போது ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்துவீர்கள். அவ்வாறு பயன்படுத்தும் போது, அவை உங்கள் முதுகில் படியாதவாறு, உங்கள் தலைமுடியை முன் பக்கமாக போட்டு அலசவும். குறிப்பாக, குளித்த பிறகும் உங்கள் முழு உடலையும் நன்கு கழுவுங்கள். மேலும், கோடையில், ஃபேஷ் கிரீம்களுக்கு பதிலாக லோஷன்களைப் பயன்படுத்துவது சிறந்தது.

சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது

குறிப்பாக கோடைகாலத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவது என்பது சற்று மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடும். ஏனெனில், சருமத்தில் சேரும் எண்ணெய் அல்லது பாக்டீரியாக்களை இறுக்கமான ஆடைகள், சரும துளைகளுக்குள் ஆழமாகத் தள்ளும். மேலும் ஸ்போர்ட்ஸ் ப்ரா அல்லது லெகிங்ஸ் போன்ற இறுக்கமான ஒர்க்அவுட் துணிகளால் ஏற்படும் உராய்வு எரிச்சல் மற்றும் சிவத்தல் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே, எப்போதும் தளர்வான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதோடு, எப்போதும் வியர்வையை வெளியேற்றிய பின்னர் குளிக்க செல்வதைப் பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →