Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

தேன் கூட இத கலந்து யூஸ் பண்ணுனா கோடைகால சரும பிரச்சனைகளை விரட்டிடலாம்...

தேன் கூட இத கலந்து யூஸ் பண்ணுனா கோடைகால சரும பிரச்சனைகளை விரட்டிடலாம்...

சரும பராமரிப்பிற்கு எவ்வளவு செலவு செய்தாலும் அவை அனைத்துமே குறுகிய காலத்திற்கு மட்டுமே பலனைத் தரக்கூடும். அதனால் தான் வீட்டு வைத்திய முறையைப் பின்பற்றுவது சரும பராமரிப்பில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பெண்கள் தங்கள் முகத்தை அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்ட மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால், சில சமயங்களில் மட்டுமே அவர்கள் அதில் வெற்றி பெறுகிறார்கள். அதே நேரத்தில், வீட்டு வைத்திய முறையை முயற்சி செய்தால், பலன் தாமதமாக கிடைத்தாலும், நிச்சயம் அது கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் எந்த வித பக்கவிளைவுகளும் இதனால் ஏற்படாது.

உங்கள் முகத்தை சிறந்ததாக மாற்ற உதவும் இரண்டு பொருட்களைப் பற்றி கூற போகிறேன். அது தான் தேன் மற்றும் பெருங்காயத்தூள். இந்த 2 பொருட்களைப் பயன்படுத்தினாலே உங்கள் சருமத்தை முகப்பரு, சுருக்கம், பிளாக்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகளையும், கோடைகால சரும பிரச்சனைகளையும் சுலபமாக விரட்டிடலாம். வாருங்கள் இப்போது அவற்றைப் பற்றி சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்…

இறந்த சரும செல்கள்
கோடையில் சருமத்தில் அழுக்கு மற்றும் வியர்வையால் இறந்த செல்கள் அதிக சேரக்கூடும். இதன் காரணமாக, சருமம் மிகவும் சோர்வாகவும், மந்தமாகவும் தெரிய தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், இறந்த செல்களை அகற்ற பெருங்காயத்தை ஒரு ஸ்க்ரப்பாகப் பயன்படுத்தலாம். ஆம் அதற்கு ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் தேனையும், அதில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூளையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு அதை முகத்தில் ஸ்கரப்பாக பயன்படுத்தி நன்கு தேய்த்து பின் கழுவிடவும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை பின்பற்றலாம். இதனால், சருமத்தில் இறந்த செல்கள் சேருவதைத் தடுத்திடலாம்.

க்ளென்சர்
பெருங்காயம் மற்றும் தேன் ஆகியவற்றில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் பெருங்காயம் மற்றும் தேனை பயன்படுத்தி செய்த க்ளென்சர் மூலம் முகத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை அகற்றலாம். எனவே, முகப்பரு போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற, முதலில் உங்கள் முகத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு தேன் மற்றும் பெருங்காயத்தை க்ளென்சராக பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு பெருங்காயத்தை தேனுடன் சேர்த்து நன்கு கலந்து, அதனுடன் இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் இதை உங்கள் முகத்தில் தடவி மசாஜ் செய்த பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும்.

வயதாவதைத் தடுக்கும்
ஒருவருக்கு வயதாகிறது என்றால் அதன் அடையாளமாக முதலில் சுருக்கங்கள் ஏற்பட தொடங்கும். எனவே, அதனை சமாளிக்க பெருங்காயத்தையும் தேனையும் தாராளமாக பயன்படுத்தலாம். உண்மையில், நிபுணர்களின் கூற்றுப்படி, பெருங்காயம் மற்றும் தேன் இரண்டிலும் வயதானவை எடுக்கும் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. அதற்கு, நீங்கள் பெருங்காயம் மற்றும் தேன் பயன்படுத்தி ஒரு ஃபேஸ் பேக் செய்ய வேண்டும். இதனுடன் முல்தானி மிட்டி மற்றும் ரோஸ் வாட்டரும் சேர்க்க வேண்டும். முதலில், ஒரு கிண்ணத்தில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், இரண்டு டிஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது அதனுடன் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் முல்தானி மிட்டி மற்றும் மூன்று டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து ஃபேஸ் பேக் பதத்திற்கு கலந்து கொள்ளவும். அதன் பிறகு, இந்த பேஸ்ட்டை முகத்தில் நன்கு உலர வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →