Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

இந்த 6 ராசிக்காரங்க 2022ல் அவங்களோட காதல் ஜோடியைப் பார்க்க போறாங்க. உங்க ராசி இதுல இருக்கா?

இந்த 6 ராசிக்காரங்க 2022ல் அவங்களோட காதல் ஜோடியைப் பார்க்க போறாங்க. உங்க ராசி இதுல இருக்கா?

நாம் அனைவரும் புது வருடத்தை வரவேற்க தயாராகி விட்டோம். 2022ஆம் ஆண்டை முழு நம்பிக்கையுடன் சிறந்த ஆண்டாக இருக்குமென்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். இந்தாண்டு நல்ல வேலை, திருமணம், வீடு வாங்குவது என பல கனவுகள் இருக்கும். சிலருக்கு, இந்த வருடமாவது எனது காதலியை, காதலனை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எனக்கு எப்போது காதல் அமையும், விரும்பிய துணையை பார்த்திட முடியுமா என பல கேள்விகள் மனதிற்குள் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்காக தான் இந்த கட்டுரை. 2022ஆம் ஆண்டு தனது காதல் ஜோடியை கண்டறியப் போகும் ராசிகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களில் சில அதிர்ஷ்டசாலிகள் 2022ம் ஆண்டு காதலை சிறப்பு வாய்ந்த ஒருவருடன் சேர்ந்து கொண்டாடப் போகிறீர்கள். எனவே, நீங்கள் 2021 இல் காதலில் அதிக கவனம் செலுத்தவில்லை என்றால், 2022 இல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உங்கள் ராசியானது 2022 இல் தங்கள் காதல் ஜோடியைக் கண்டுபிடிக்க போகும் ராசிக்காரர்களின் பட்டியலில் உள்ளதா என்பதை பார்த்திடுவோம்…

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் அனைவருக்கும், இந்த ஆண்டு பொற்காலமாக மாறப்போகிறது. இத்தனை நாட்கள் தனிமையில் வாடிய உங்களுக்கு விடியல் வரப்போகிறது. இளம் காதல் ஜோடிகளில் ஒருவராக நீங்கள் மாற போகிறீர்கள். என்ன ஒரே ஜாலியாக இருக்கிறதா? 2022ம் ஆண்டு கணிப்பின் படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிஷப ராசிக்காரர்கள் தங்களின் வருங்கால வாழ்க்கைத் துணை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இத்தனை நாட்கள் காதலில் அவ்வளவு விரும்பம் இல்லாதவராக இருந்திருந்தால், உங்களது சிறு முயற்சி கூட 2022ல் வெற்றியில் முடியும். ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் விசுவாசமான, அன்பான மற்றும் இரக்க குணமுள்ள ராசிக்காரர்களில் ஒருவர். எனவே, காதல் என்று வரும்போது, ​​உங்களின் இந்தக் குணங்கள் 2022-ல் உங்களுக்கா துணைக் கண்டுபிடிக்க உங்களுக்கு நிச்சயமாக உதவும். நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம், உங்களுக்கான துணையை கண்டறிவதற்கான நேரம் மிக அருகில் வந்துவிட்டது. 2022ஆம் ஆண்டு காதலுக்காக நேரம் செலவிட தயாராகுங்கள்.

கடகம்

தனிமையில் வாடி வந்த கடக ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு காதல் விஷயத்தை பெரும் அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். நீங்கள் பல்வேறு விஷயங்களிலிருந்து பயனடைவீர்கள். அவற்றில் காதலும் ஒன்று. 2022 இல் காதலர் தினத்தைக் கொண்டாட சிறந்த வழி எது என்று நீங்கள் யோசித்தால்? அது ஆடம்பரமான கொண்டாட்டத்திற்கு வழிவகுக்கும். கடந்தகால நினைவுகள் உங்கள் காதல் வாழ்க்கைக்கு தடையாக இருப்பது நல்லதல்ல. ஏனென்றால், அவை புதிய நபர்களின் சந்திப்பை புறக்கணிக்கும். எனவே, இந்த ஆண்டிற்கான குறிக்கோள், புதிய நபர்களுடனான நட்பு என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள். இது உங்களது காதல் ஜோடியை கண்டறிய நிச்சயம் உதவும். மேலும், 2022 புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் காதல் மலர வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும். உங்கள் அன்பான சுபாவம் நிச்சயம் உங்களுக்கு ஏற்ற ஒருவரை சந்திக்க வைக்கும். இவை அனைத்திலும் சிறந்த அம்சம் என்னவென்றால், நீங்கள் அவசரப்பட வேண்டியதில்லை. பெரும்பாலான கடக ராசிக்காரர்கள் ஆண்டின் தொடக்கத்திலேயே தங்களது ஜோடியைக் காணலாம். எனவே வெளியில் அவரைத் தேடி அலைய வேண்டியதில்லை. சிறப்பு வாய்ந்த ஒருவருடன் உலகை ரசிக்க நீங்கள் தயாராக வேண்டும்.

கன்னி

கனிவு, நம்பகத்தன்மை மற்றும் பொறுமை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர் கன்னி ராசிக்காரர்கள். இத்தகைய குணம் கொண்ட ஒருவரை யாருக்கு தான் பிடிக்காது? கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று தனிமையில் வாடிய உங்களுக்கு 2022ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் உச்சத்தில் திழைக்கப் போகிறீர்கள். ஏனெனில், உங்களுக்கான காதல் ஜோடியை சந்திக்க போகிறீர்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு வியாழன் மற்றும் மீனம் ஒரே பக்கத்தில் வருவது அவர்களுக்கு மகிழ்ச்சியான தொடக்கத்தைக் குறிக்கும். ஏற்கனவே காதலிப்பவர்கள், புதிதாக காதலைத் தொடங்குபவர்கள் அனைவருக்குமே 2022ஆம் ஆண்ட சிறந்த அனுபவத்தைக் கொடுக்கப் போகிறது. கன்னி ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரிடம் தங்களது காதலை ஒப்புக்கொள்ள வெட்கப்படக்கூடாது. நீங்கள் நீண்ட காலமாக உங்கள் உணர்வுகளை மறைத்து வைத்திருந்தால், அவற்றை வெளியேற்ற வேண்டிய நேரம் இது. 2022 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று புதிதாக ஒருவரைச் சந்தித்தால், உங்கள் வாழ்க்கையில் காதல் மலரப் போகிறதும், உங்கள் வாழ்க்கை இன்னும் சிறப்பானதாக மாறும் போகிறது என்றும் அர்த்தம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, 2022ஆம் ஆண்டு உங்களுக்கான சிறப்பு வாய்ந்த ஒருவரைக் கண்டறிய சிறந்த நேரம். புத்தாண்டில் காதல் ஜோடியை கண்டறியப் போகும் ராசிகளின் பட்டியலில் உங்கள் ராசியும் ஒன்று. 2022ஆம் ஆண்டு உங்கள் ஜாதகத்தின்படி, வருடத்தின் ஆரம்ப மாதங்களில் சிறப்பு வாய்ந்த ஒருவருடன் சிறிது தூரும் வரை செல்லலாம். எனவே, உங்கள் காதல் வாழ்க்கையின் புதிய திசை வரவிருப்பதால், உங்கள் கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். காதல் என்பது நீங்கள் விரும்பும் ஒருவருடன் காதல் மற்றும் பாசத்தைப் பகிர்ந்து கொண்டாடுவதாகும். மேலும், அந்த வாய்ப்பைப் பெறுவதற்கு 2022 உங்களை இரு கரம் நீட்டி வரவேற்று நிற்கிறது. 2022ல் உங்கள் வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் சிறப்பாக மாறும். காதலும் அதில் அடங்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் குறையே கூற முடியாத அளவு சிறந்த பண்புகளுடன் பிறந்தவர்கள். அதனால், யாரையும் காதலில் விழ வைக்கும் திறன் கொண்டவர்கள். ஆனால், இவர்கள் அவ்வளவு எளிதாக காதலில் விழுந்து விடமாட்டார்கள் என்றாலும், 2022ல் இது மாறக்கூடும். நீண்ட காலமாக தனிமையில் இருந்து வந்ததை விரும்பவில்லை என்றால், உங்களுக்காக சில செய்திகள் காத்திருக்கிறது. உங்கள் ஜாதகத்தின்படி, இந்த புத்தாண்டு காதல் அடிப்படையில் இனிமையான ஆண்டாக இருக்கப் போகிறது. இத்தனை நாட்களாக நீங்கள் தேடி கொண்டிருந்த நபர், உங்கள் அருகில் இருக்கும் ஒருவராக கூட இருக்கலாம். தனுசு ராசிக்காரர்களுக்கு எங்கிருந்தோ எல்லாம் யாரும் வரப்போவது கிடையாது. அருகே இருக்கும், நெருங்கிய நபர் தான் மேலும் நெருக்கமாக அன்பை பரிமாறிக்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே, எதிர்பாராததை எதிர்பார்க்க தயாராக இருக்க வேண்டும். உங்களுக்கு இது பழக்கமில்லாத ஒன்றாக இருந்தாலும், இவை அனைத்தையும் செய்ய உங்கள் முயற்சியும் நேரமும் அவசியம். இத்தனை நாட்களாக அனுபவிக்க தவறிய பேரின்பத்தை அனுபவிக்க தயாராகி கொள்ளுங்கள்.

மீனம்

ஜாதகம் முழுவதும் காதலில் நிறைந்திருக்கும் ராசிக்காரர்கள் என்றால் அது மீன ராசிக்காரர்கள் தான். 2022ஆம் ஆண்டு உங்கள் காதல் வாழ்க்கையை வரவேற்க தயாராகி கொள்ளுங்கள். இத்தனை நாட்கள் கிடைக்காத வாய்ப்பு உங்களைத் தேடி வரப்போகிறது. அதுவும் பொறுமையாக தான் வரும். உங்களுக்கான வாய்ப்புகளையும் அதிகரித்து கொடுக்கும். 2022ஆம் ஆண்டு காதல் பற்றிய புதியதொரு கண்ணோட்டத்தை உங்களுக்கு வழங்கும். பிறரை மகிழ்விக்கும் உங்களது குணமே உங்களுக்கான ஜோடியை உங்களிடம் வந்து சேர உதவும். காதல் மற்றும் உற்சாகம் உங்கள் வாழ்க்கையில் நிறைந்து காணப்படும். இதற்கு, உங்கள் ராசியின் பன்னிரண்டாவது வீட்டில் சனியின் சஞ்சாரத்திற்கு தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். இருந்தாலும், உங்களது துணை தேட நீங்கள் தான் முயற்சிக்க வேண்டும். உங்களுக்காக யார் காத்திருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியாது. எனவே, தயக்கத்தை விடுத்து உங்களுக்கு நபரை தேடும் வழியில் தொடர்ந்து முன்னேற வேண்டும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →